உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 24ல் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 24ல் கும்பாபிஷேகம்

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி, என்.சந்திராபுரம் முத்துமாரியம்மன் கோவில், திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. கோவில் வளாகத்தில், கர்ப்பகிரகம், முன்மண்டபம் மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.தவிர, விநாயகர், முருகன், மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் உருவாரங்கள் செதுக்கப்பட்டு, 21ம் தேதி மங்கள இசை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 22ம் தேதி முதல்கால யாக பூஜை, 23ம் தேதி இரண்டாம்கால யாக பூஜை நடக்கிறது. விமான கலசம் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து, மூன்றாம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 24ம் தேதி அதிகாலை, நான்காம் கால யாக பூஜை, காலை, 9:00 மணிக்கு விநாயகர், முத்துமாரியம்மனுக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம், 9:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !