உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; திரளானோர் தரிசனம்

அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; திரளானோர் தரிசனம்

இடைப்பாடி: அங்காளம்மன் கோவில், மூன்று நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவூர் அருகே, கல்வடங்கம், காவிரி கரையோரம், அங்காளம்மன் கோவில் உள்ளது. அதன் திருவிழா, கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ல், 3 நாள் தேரோட்டம் தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. அதில், சுற்றுவட்டார பகுதி மக்கள், தேரை வடம்பிடித்து இழுத்து, முக்கிய வீதி வழியாக வந்து, நிலை சேர்த்தார்கள். இதில், 3,000க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

பூச்சாட்டுதல்: இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை, மாரியம்மன், காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கம்பம் போடுதல், பூச்சாட்டுதலுடன், நேற்று தொடங்கியது. வரும், 26ல் விநாயகர் புறப்பாடு, 27 இரவு கொடியேற்றம், 28 முதல் 30 வரை, சுவாமி வீதிஉலா, 31 காலை மாரியம்மன் திருக்கல்யாணம், காளியம்மன் கோவில் சக்தி அழைத்தல், குண்டம் இறங்குதல், திருத்தேர் வடம் பிடித்தல், ஏப்., 1 தேரோட்டம், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பூங்கரகம், 2 சப்தாபரணம், 3ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !