கற்பக விநாயகர் கோயிலில் பூக்குழி விழா
ADDED :1924 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆவரேந்தல் கற்பக விநாயகர் கோயிலில் பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 18 வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்றன. சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.