உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாத்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

வீரமாத்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

அன்னுார்: பொகலுார் வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

பொகலுாரில், கன்னிமார், கருப்பராயன் மற்றும் வீரமாத்தி அம்மன் கோவிலில், பாலகணபதி மற்றும் பாலமுருகன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. பல்வேறு நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, வேள்வி பூஜை, 22ம் தேதி மாலை வரை நடந்தது. 23ம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது.

நேற்று காலை 10:00 மணிக்கு, வீரமாத்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்றனர். அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !