உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனஅழுத்தத்துக்கு இடம் தராதே

மனஅழுத்தத்துக்கு இடம் தராதே

எச்சரிக்கிறார் அரவிந்தர்

* மனஅழுத்தத்துக்கு இடம் தராதே. மனஅழுத்தம் தரக்கூடிய எந்த விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பது தான், அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
* உன் மனதிற்குள் இருக்கும் இருளை வெளியேற்றினால் தான் உண்மையான தெய்வீகத்தை உணர முடியும்.
* நடந்து முடிந்ததைப் பற்றியும், நடக்கவிருப்பதைப் பற்றியும் மட்டும் நினைப்பது வீண் முயற்சியே.
* எல்லையற்ற ஆற்றல் கொண்ட கடவுள் இருக்கிறார் என உணர்வதே ஞானத்தின் தொடக்கநிலை.
* கடவுளின் கண்ணிற்கு அற்பமானது என்று எதுவுமில்லை. எல்லா உய சமமாக பாவிக்கும் கடவுளைப் போலவே நீயும் இரு.
* துயரங்களைச் சலனமின்றிக் கடந்து செல்பவனே லட்சியவாதி. எத்தனை தோல்விகள் குறுக்கிட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.
* துன்பத்துக்காக வருந்த வேண்டாம். இன்பத்திற்காக ஏங்கவும் வேண்டாம். வாழ்வில் இரண்டும் மாறி மாறி வரும்.   
* மூளையை பயன்படுத்தி கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். இதயத்தால் அவரை நேசியுங்கள்.
* மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதை தெரிந்து கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.  
* கடவுளுக்கு அடிபணிந்து வாழ்வதே வாழ்வில் எப்போதும் ஆனந்தத்தை கொடுக்கும்.
* ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு பேரரசை நிறுவுவதை விடவும் சிறந்தது.  
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மன தைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் தீய உணர்வு.
* அடுத்தவர்களைக் குறை சொல்வது, மதிப்பீடு செய்வது, உங்களோடு ஒப்பிட்டுவது இவற்றின் மூலம் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  
* எது உனக்கு உண்மையாகத் தேவைப்படுகிறதோ அது உன்னைத் தேடி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !