உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வ கோவிலில் வேட்பாளர் காணிக்கை

குலதெய்வ கோவிலில் வேட்பாளர் காணிக்கை

 அ.தி.மு.க., கூட்டணியில், ஊட்டி தொகுதி,பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்குபின், கோத்தகிரியை சேர்ந்த போஜராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், நேற்று படுகர் மக்களின் குலதெய்வமான பேரகணி மற்றும் பெத்தளா ஹெத்தையம்மன் கோவில்களில் காணிக்கை செலுத்திய பின், வேட்புமனு தாக்கலுக்கு சென்றார்.தொகுதிக்கு உட்பட்ட தொதநாடு கடநாடு கிராமத்தில், ஹிரோடைய்யா கோவிலிலும் காணிக்கை செலுத்தி, கிராமப்புறங்களில் ஓட்டு சேகரித்தார். போஜராஜனுக்கு மக்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தாமரை கோஷங்கள் முழங்குவதால், காங்., கட்சியினர் சற்று, அப்செட் ஆகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !