உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் கோடை விழா கொடியேற்றம்
ADDED :1672 days ago
உடுமலை: உடுமலை பத்ரகாளியம்மன் கோவில் கோடை திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில், நடந்தது. உடுமலை சங்கிலிவீதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், திருவிழா, கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, சூலத்தேவருடன், அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்தார். நேற்று மாலை முளைப்பாலிகையிட்டு, கும்பம் எடுத்து வரப்பட்டது.வரும், 27ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பூவோடு எடுத்தலும், வரும், 28ம் தேதி, மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.