ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷியின் குருபூஜை விழா
ADDED :1770 days ago
மதுரை : மதுரை, பழங்காநத்தம் ஈஸ்வரன் கோவிலில் சத்குருவாய் அருள்பாலிக்கும் குரு மகராஜ் ஸ்ரீ ஆதிசேட பதஞ்சலி மஹரிஷிக்கு வரும் சனிக்கிழமை (3.4.2021) மாலை 6.00 மணியன்று குரு பூஜை பெருவிழா துவங்குகிறது. பங்குனி மூல நட்சத்திரப் பெருவிழாவில் சத்குருவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் அரசின் அறிவிப்பின்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய திருக்கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளனர்.