ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1673 days ago
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை, பள்ளிக்கரணையில் சாந்தநாயகி சமேத, ஆதிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், மகா நந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம், ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. அதன் படி, இந்த ஆண்டிற்கான நந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை யாகசாலை வளர்க்கப்பட்டு, சங்கல்பம், 108 கலச பூஜை, மகா ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.நேற்று மாலை, 5:00 மணிக்கு சீர்வரிசை, பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு திருமண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.