அந்தமானில் காஞ்சி மடம் நன்கொடைக்கு அழைப்பு
மதுரை:காஞ்சி காமகோடி பீடம் சார்பில், அந்தமான் தீவில் கட்டப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு மையம் கட்டுமானத்திற்கு, பக்தர்கள் நன்கொடை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி காமகோடி மடம் சார்பில், பல்வேறு மாநிலங்களில், சமுதாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, அந்தமான் -- நிக்கோபார் தீவுகளில், தேசிய ஒருமைப்பாட்டு மையம், கட்டப்பட்டு வருகிறது.இதற்கு பக்தர்கள், 51 ஆயிரம் ரூபாய், அதன் மடங்குகளில் நிதி வழங்கலாம்.அவர்களின் பெயர், மையத்தில் அமைக்கப்பட உள்ள கல்வெட்டில் பொறிக்கப்படும். திறப்பு விழாவின்போது ஏழு மோட்சபுரிகள், 51 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நாட்டியம், கலாசாரநிகழ்ச்சிகளும் நடக்கஉள்ளன. நன்கொடை செலுத்த விரும்புவோர், ஸ்ரீ பிரத்யக் ஷா சாரிடபிள் டிரஸ்ட் - Sri Pratyaksha charitable trust, கனரா வங்கி, கோபாலபுரம் கிளை, S.B.no.0930101108255, IFSC : CNRB000930 என்ற எண்ணில் செலுத்தலாம் என மடத்தின் மேலாளர் சுந்தரேசன் தெரிவித்து உள்ளார்.மேலும் விபரங்களுக்கு, 98408 33575 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.