அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1920 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள, அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரிலுள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றிற்கு, தேன், பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமியை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.