உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில், இன்று (மார்ச்., 27ல்) தேரோட்டம் நடந்தது.

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) திருக் கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  விழாவில் 30ம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா, 31-ம் தேதி தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !