உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சோபுரநாதர் கோவிலில் தேரோட்டம்

திருச்சோபுரநாதர் கோவிலில் தேரோட்டம்

 புதுச்சத்திரம் : திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 24ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணிக்கு தேர் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.தேரோட்டத்தையொட்டி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !