உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருக்கல்யாணம் விமரிசை

கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருக்கல்யாணம் விமரிசை

மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப்பெருவிழாவின் கடைசி நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக அரங்கேறியது.


உற்சவர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள்மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சென்னை , மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை , திருக்கூத்தபெருமான்  திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது. மாலை , 6:30 மணிக்கு, புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருமண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, கைலாய ஊர்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் பங்குனி விழா நிறைவு பெற்றது. இன்று பந்தம் பறி விழா, நாளை விடையாற்றி விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !