உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் பறக்கும் காவடியில் நேர்த்திக்கடன்

ராமேஸ்வரத்தில் பறக்கும் காவடியில் நேர்த்திக்கடன்

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் மேலவாசல் முருகனுக்கு பக்தர்கள் பறக்கும் காவடியில் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்தனர்.

நேற்று பங்குனி உத்திர விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மேலவாசல் முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.ராமேஸ்வரம் புதுரோடு, கரையூர் இந்திரா நகர், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறக்கும் காவடி, தேர்காவடி, பால் காவடியில் மேலவாசல் முருகன் சன்னதிக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !