உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

 வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலையில் இருந்து தாணிப்பாறைக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. காலை 6:00 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின், உடல் வெப்ப பரிசோதனை செய்யபட்டு, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கபட்டனர். மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னிதிகளில் பவுர்ணமி வழிபாடு சிறப்புடன் நடந்தது.கொளுத்தும் வெயிலிலும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !