அறநிலையத்துறையிடம் கோயில் ஒப்படைப்பு
ADDED :1753 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகம் ஹிந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் இருதரப்பிடையே ஏற்பட்ட பிரச்னையில் கடந்த இரு ஆண்டுகளாக சித்திரையில் பொங்கல் விழா நடக்கவில்லை. இதுதொடர்பாக நடந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் தங்கலதா, சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பையும் ஏற்றார். பூஜைகள் வழக்கம்போல் நடக்கின்றன.