கடலாடி முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :1950 days ago
கடலாடி: கடலாடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் முத்தாலம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை பூசாரி கூரியைய்யா செய்திருந்தார். கோயில் நிர்வாகி சின்னத்தம்பி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.