உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் யானையூட்டு வைபவம்

புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் யானையூட்டு வைபவம்

​பாலக்காடு; செர்ப்புளச்சேரி புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் யானையூட்டு வைபவம் இன்று பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடந்தது.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி உள்ளது பிரசித்தி பெற்ற புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் ஆடி மாதம் யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வான யானையூட்டு நடப்பது வழக்கம். நடப்பாண்டு நிகழ்வு நேற்று வெகு விமர்சியாக நடந்தது. ​காலை 5:00 மணிக்குக் கோவில் தந்திரி அண்டலாடி உன்னி நம்பூதிரி மற்றும் விஷ்ணு நம்பூதிரி ஆகியோரின் தலைமையில், 1008 தேங்காய்களைக் கொண்டு நடத்தப்பட்ட அஷ்டதிரவிய மஹாகணபதி ஹோமத்துடன் விழாவின் சடங்குகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கஜபூஜையில் , செர்ப்புளச்சேரி அய்யப்பன் என்ற யானை கணபதியாகப் பாவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. வானிலை நிலவியபோதிலும், மழை மற்றும் தடைகளைத் தாண்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் யானையூட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர். ​முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் யானையூட்டு வழிபாடுகளுக்காக முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்குச் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !