கிளங்காட்டூரில் 1200 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம்
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கிளங்காட்டூரில் 1200 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மானாமதுரை அருகே கிளங்காட்டூரிீஈஈஈல் மண்ணுக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் கண்டெடுத்து பூஜைகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோவை அரண் பணி அறக்கட்டளை மற்றும் கிளங்காட்டூர், ஏ.நெடுங்குளம் கிராம பொதுமக்கள் சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம் நேற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.இன்று அதிகாலை சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது.பின்னர் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து சுவாமிகளுக்கு மீனாட்சி, சொக்கநாதர் என பெயரிட்டனர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.