உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று காவடிகளுடன் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், மூன்று மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, விடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து, திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று, வார விடுமுறை என்பதால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசித்தனர். விடியற்காலை முதலே, வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்றதால், மலைக்கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் கோர்ட்டுக்கு பின்புறம் நிறுத்தப்பட்டு, கோவில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். பொதுவழியில், நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !