ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி விழா துவங்கியது
ADDED :1654 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதைமுன்னிட்டு நேற்று காலை கோயிலில் மஹாகணபதி பூஜை, புண்யாஹவாசனம், காப்பு கட்டுதல் முடிந்து, மாரியம்மன் கோயில் தெருசாவடியிலிருந்து கொடிபட்டம் வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டு வரபட்டது. காலை 9:05 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்ய அர்ச்சகர் ஹரிஹரன் கொடி ஏற்றினார். அப்போது திரண்டி ருந்த பக்தர்கள் குலவையிட்டு அம்மனை தரிசித்தனர். 13 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் காலையில் அம்மன் மண்டபம் எழுந்தருளல், இரவில் வீதி உலா நடக்கிறது.ஏப்ரல் 11 மதியம் 1:35 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஏப்ரல் 12 மதியம் 12:15 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கலாராணி செய்திருந்தனர்.