திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நடக்கிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலை சேர்ந்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஸத் சங்கம் சார்பில் 47வது ஆண்டு ராமநவமி மகோற் சவம் கடந்த 6ம் தேதி துவங் கியது. இதனையடுத்து காலை 7 மணி முதல் 11 மணி வரை நடராஜ சர்மாவின் ஸ்ரீ மத் வால்மீகி ராமாயண நவாஹமூல பாராயணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7.30 மணிக்கு ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள், ராமநவமி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். தனையடுத்து பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஸ்ரீ மத் ராமாயண உபன்யாசம், வரும் 14ம் தேதி வரை தினசரி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. விழாவின் நிறைவாக 15ம் தேதி காலை 8 மணிக்கு சீதாலஷ்மண அனுமன் சமேத ராமச்சந்திரமூர்த்தி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.