பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா!
ADDED :4915 days ago
திருவெண்ணெய்நல்லூர்: பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 29ம் தேதி வயல் வெளியிலிருந்த சுவாமியை ஊருக்கு கொண்டு வந்து, தினமும் சுவாமி வீதியுலாவும், 4ம் தேதி மூன்றாம் கால் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 5ம் தேதி இரவு 9 மணிக்கு சுவாமிக்கு கண் திறந்து முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. மறுநாள் காலை 6 மணிக்கு தேர்த் திருவிழா நடந்தது. மாலை 5 மணிக்கு அழிகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடந்தது. நேற்று தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கண்ணன், ஊராட்சி தலைவர் சின்னையன், ஊர் நாட்டாண்மைகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.