கடம்பவனேஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.3 லட்சம்
ADDED :1650 days ago
குளித்தலை: கடம்பவனேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக, மூன்று லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். குளித்தலையில், பிரசித்தி பெற்ற கணபதீஸ்வரர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தான்தோன்றிமலை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில், கடம்பவனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணம், வெள்ளி, தங்க நகைகள் இருந்தன. பணம், நகைகள் பிரித்து எண்ணும் பணியில், கடம்பவனேஸ்வரர் கோவில் பகுதி இளைஞர்கள், கோவில் பணியாளர்கள், அலுவலர்கள ஈடுபட்டனர். மொத்தம், மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 365 ரூபாய் மற்றும் 11 கிராம் தங்க நகை, 152 கிராம் வெள்ளி இருந்தது.