வத்தலக்குண்டு ஊர் கால சாமி கோயில் திருவிழா
ADDED :1964 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஊர் கால சாமி கோயில் பங்குனித் திருவிழா கரக அலங்காரத்துடன் துவங்கியது. கரகங்கள் மஞ்சள் ஆற்றில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கிடா வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் மஞ்சள் நீராட்டு விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.