உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் தரிசனம்: ஐந்து மணி நேரம் ரத்து

ஏழுமலையான் தரிசனம்: ஐந்து மணி நேரம் ரத்து

 திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை மட்டும், ஐந்து மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலை ஏழுமலையான் கோவில், ஆண்டுக்கு நான்கு முறை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடப்பதற்குமுன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.அதன்படி, ஏப்., 13ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்கு முன்பாக வரும் செவ்வாய்க்கிழமையான, ஏப்., 6ம் தேதி, ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு அன்று காலை, 6:00 - 11:00 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று மதியம், 12:00 மணிக்கு பின், பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !