உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு

இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 11:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு கொல்கத்தாவில் உள்ள அமல மரிய மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேம்ஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். திருச்சி தூய வளனார் கல்லூரி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, சென்னை நம் வாழ்வு துணை ஆசிரியர் பிரின்ஸ் உள்ளிட்ட பங்குத் தந்தைகள் சிறப்பு திருப்பலியை நடத்தினர். மதுரை,திருச்சி, சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இரவு 12:00 மணிக்கு இயேசு பிறப்பு செய்தி வாசிக்கப்பட்டு இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த குடில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ஆறத் தழுவிக் கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் சர்ச் வளாகத்தில் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் ஏராளமான பங்குத்தந்தைகள் கிறிஸ்தவர்கள் கேக் வெட்டி விழாவை கொண்டாடினர். இதே போன்று மானாமதுரை புனித குழந்தை தெரசாள்,சவேரியார் பட்டணம், ராஜகம்பீரம் உள்ளிட்ட ஊர்களிலும் இளையான்குடி அருகே உள்ள ஏராளமான ஊர்களிலும் சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !