/
கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: திருவாதிரை முதல் நாள் உற்சவம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: திருவாதிரை முதல் நாள் உற்சவம்
ADDED :11 hours ago
அவிநாசி; ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருவாதிரை முதல் நாளான இன்று காப்பு கட்டுதல், திருவெம்பாவை உற்சவம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வரும் ஜனவரி 3ம் தேதி ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதல், திருவெம்பாவை உற்சவம் மற்றும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.