சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழா
ADDED :13 minutes ago
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
விழா கடந்த 20ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கரகம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு இருளமுகம், உச்சிக்கொப்பரையுடன் மயானம் செல்லுதல் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு குறத்தி வேடம் அணிந்து வீதியுலா; மாலை 6.00 மணிக்கு மயானம் செல்லுதல்; இரவு 7:00 மணிக்கு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.