உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர் : வடுகபாளையம், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 14ம் தேதி நடக்கிறது. காட்டம்பட்டி அருகே உள்ள, வடுகபாளையம் சித்திவிநாயகர், பாலமுருகன், ஆதி விநாயகர் கோவிலில், பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா, வரும் 13ம் தேதி மாலை, திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. அன்று இரவு, வேள்வி பூஜை, பிள்ளையார் வழிபாடு, எண் வகை மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கின்றன. 14ம் தேதி அதிகாலை வேள்வி பூஜை, திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், சின்ன தொட்டிபாளையம் கருப்பராய சாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர். மகா அபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !