திரவுபதை அம்மன் கோயில் விழா: அரக்கர்களை விரட்டிய பீமன்
ADDED :1688 days ago
திருவாடானை : திரவுபதை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானையில் உள்ள திரவுபதை அம்மன் கோயில் திருவிழா கடந்த 1 ந் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பீமன் வேடமிட்டு அரக்கர்களை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. தேரோடும் வீதிகளில் வழியாக நடந்த இந் நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். பீமனை வரவேற்ற பொதுமக்கள் பால், பழம், இனிப்புடன் கூடிய பச்சரிசி போன்ற பல உணவுகளை வழங்கினர். நாளை இரவு பூக்குழி விழா நடைபெறும்.