புலியகுளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா
ADDED :1641 days ago
கோவை : கோவை புலியகுளம் மாரியம்மன் மற்றும் மாகாளி அம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, மகா அபிஷேக அலங்கார ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாயை முன்னிட்டு பெண்கள் பலர் கலந்து கொண்டு அலகு குத்தி வழிபாடு நடத்தினர். சில பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். மாரியம்மன் மற்றும் மாகாளி அம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.