சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு
ADDED :1646 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இக்கோயிலில் 5 அடி உயர நந்தி சிலை உள்ளது. பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு, பால் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.