ராமானுஜர் அவதார உற்சவம் எளிமையாக துவக்கம்
ஸ்ரீபெரும்புதுார் : கொரோனா தொற்று காரணமாக, ராமானுஜரின், 1,004வது அவதார உற்சவ விழா, நேற்று, எளிமையாக துவங்கியது.
ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜரின் அவதார உற்சவ விழா, ஆண்டுதோறும், 10 நாட்கள், விமரிசையாக நடப்பது வழக்கம்.கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 1,004ம் ஆண்டு அவதார உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று, மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால், தமிழக அரசு, திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.இதன் காரணமாக, நேற்று, உற்சவ விழா, பக்தர் கள் கூட்டமின்றி, எளிமையாக துவக்கப்பட்டது. தவிர, அனைத்து வாகன புறப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டு, கோவில் உள்ளே, உற்புறப்பாடு மட்டும் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.