அகிலாண்டேஸ்வரி கோவிலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிறைவு!
ADDED :4879 days ago
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடக்கும் அமர்நாத் பனிலிங்க தரிசனம் இன்றுடன் (11ம் தேதி) நிறைவு பெறுகிறது. பிரம்மகுமாரிகள் பவளவிழாவையொட்டி, அமர்நாத் பனிலிங்கத்தை திருச்சி மாவட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜெம்புகேஸ்வரர் கோவில், நவராத்திரி கொலுமண்டபம் அருகே குகைபோல் அமைத்து பனிலிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி துவங்கிய பனிலிங்க தரிசனம், இன்றுடன் (11ம் தேதி) நிறைவு பெறுகிறது. காலை ஒன்பது மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் மூன்று மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பனிலிங்க தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்பாடுகளை பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் செய்துள்ளது.