உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்டேஸ்வரம் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கோவிலில் மழை வேண்டி யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக அதிகளவு வெயில் அடிக்கிறது. கரும்பு உட்பட அனைத்து பயிர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்காமல் கருகும் அபாயம் உள்ளது. ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை சார்பில் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ் வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடத்தினர்.நந்தியை ”ற்றி தண்ணீர் தேங்குமாறு ”வர் கட்டினர். வருண யாகம் நடத்தி புனித நீரைக் கொண்டு நந்தி மூழ்கும் வரை நிரப்பினர். நந்தி குளிர்ந்தால் மழை பெ#யும் என சேனாபதி குருக்கள் கூறினார். ஆலை துணைத்தலைவர் ராஜசேகர், கரும்புப்பிரிவு பொது மேலாளர் கருணாகரன், உதவி பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், மேலாளர் திருஞானம், விவசாய சங்க தலைவர் சுப்ரமணிய ரவி, ராமலிங்கம், ராம் குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !