உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் பெண்கள் பள்ளிவாசல் திறப்பு விழா

கீழக்கரையில் பெண்கள் பள்ளிவாசல் திறப்பு விழா

கீழக்கரை: கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா ஜங்ஷன் குடும்ப நண்பர்கள் இணைந்து பெண்கள் தொழுவதற்கான பள்ளி வாசல் திறக்கப்பட்டது.

இப்பள்ளி வாசலை கீழக்கரை வடக்குத் தெரு ஜமாத் தலைவர் ரெத்தின முகமது திறந்துவைத்தார். பள்ளிவாசலின் இமாம் செய்யது முகம்மது கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். வடக்கு தெரு ஜமாஅத் துணைத்தலைவர் அப்துல் ஹமீது வாழ்த்துரை வழங்கினார். சீனி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிப், சாகுல்ஹமீது, செயலாளர் அமீர்பாட்சா உள்பட பலர் பங்கேற்றனர். உலக அமைதிக்காகவும், கொரோனா நோயிலிருந்து விடுபடவும் வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஜிப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !