பக்தர்களுக்கு தரிசன அனுமதி
ADDED :1636 days ago
வடமதுரை: வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2வது அலை அதிகரித்துள்ளதால் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடமதுரை கோயிலில் சுவாமி புறப்பாடு இருக்காது. அதேநேரம் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என செயல் அலுவலர் மாலதி தெரிவித்துள்ளார்.