சிங்கம்புணரி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED :1737 days ago
சிங்கம்புணரி: தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிங்கம்புணரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அருள்தரும் ஐயப்பன் ஆலயத்தில் படி பூஜை நடத்தப்பட்டு விஷூ கனி அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.