உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு கோவில்களில் குவிந்த மக்கள்

தமிழ் புத்தாண்டு கோவில்களில் குவிந்த மக்கள்

புதுச்சேரி; தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் ஏராளமானோர் நேற்று தரிசனம் செய்தனர்.பிலவ தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.அதுபோல, புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !