உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நக்கம்பாடியில் ஜூன் 14ல் கோவில் கும்பாபிஷேகம்!

நக்கம்பாடியில் ஜூன் 14ல் கோவில் கும்பாபிஷேகம்!

அரியலூர்: நக்கம்பாடி கிராமத்தில் வரும் 14ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நக்கம்பாடி கிராமத்தில் உள்ள விநாயகர், சிறைமீட்ட ஐயனார் கோவில், முனியப்ப ஸ்வாமி, மாரியம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், சப்த கன்னியர், பூரண புஷ்பகலா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக விழா, வரும்14ம் தேதி வியாழக்கிழமை, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக 13ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடக்கிறது.நல்லறிக்கை ராஜா தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்த உள்ள இக்கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, நக்கம்பாடி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !