ரெட்டைமலை கோவிலில் ஜூன் 17ல் வருடாபிஷேகம்!
திருச்சி: திருச்சி ரெட்டைமலை ஒண்டி கருப்புச்சாமி கோவிலில் வரும் 17ம் தேதி வருடாபிஷேகம் நடக்கிறது.திருச்சி ரெட்டைமலை ஒண்டி கருப்புச்சாமி கோவில் வருடாபிஷேக விழா வரும் 16ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள நடக்கிறது. 16ம் தேதி மாலை ஐந்து மணிக்கு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், விநாயகம் பூஜை, கலச பூஜைகள், முதல்கால யாகசாலை பூஜை, தீபராதனை நடக்கிறது. மறுநாள் 17ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், காலை ஆறு மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 சங்கு பூஜைகள், சண்டி மகாயாகம், சுமங்கலி பூஜை, பட்டு புடவை ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது.மலைக்காளியம்மன், ஐய்யனார், ஒண்டி கருப்புச்சாமி, ö பரிய கருப்பச்சாமி, நீலமேகச்சாமி, மதுரை வீரன், சன்னாசி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சங்காபிஷேகம், பால் அபிஷேகம், தீபராதனை நடக்கிறது. மதியம் 12 மணி க்கு அன்னதானம் நடக்கிறது.கிடாவிருந்து: வரும் 18ம் தேதி மதியம் 12 மணிக்கு, ஆட்டுகிடா வெட்டி, பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. முன்னதாக, ஏழாம் தேதி முதல் 16ம் தேதி வரை பால்குடம் எடுப்பவர்களுக்கு காப்பு கட்டும் வைபவம் நடக்கிறது.