உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பகுதியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி பகுதியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

 கள்ளக்குறிச்சி; தமிழ் புத்தாண்டையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு சித்தி விநாயகர் காமாட்சி அம்மன் கோவிலில் காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை நடந்தது. புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், முத்துமாரியம்மன், திரவுபதியம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, சக்தி விநாயகர், கற்பக விநாயகர் கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், சோமண்டார்குடி, தண்டலை, முடியனுார், வரஞ்சரம், தென்கீரனுார் ஆகிய பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் விருகாவூர் சர்க்கரை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கேரளத்தை சேர்ந்தவர்கள் நேற்று அதிகாலையில் விஷுக்கனி பூஜை செய்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினர். தமிழ் புத்தாண்டையொட்டி ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் உற்சவர் அரங்கநாத பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !