வானவர் நுழையாத வீடு
ADDED :1930 days ago
வானவர்கள் பூமிக்கு ஆசியளிப்பதற்காக வருவார்கள். ஆனால் அவர்கள் இரண்டு வீட்டுக்குள் மட்டும் நுழைய விரும்புவதில்லை. பெற்றோரைத் துன்புறுத்தும் பிள்ளைகள் வாழும் வீடு, விருந்தினரை உபசரிக்காத வீடு. பெற்றோரின் தேவையறிந்து உதவுவது பிள்ளைகளின் கடமை. மனதிற்கு பிடிக்காத உறவினரோ, விருந்தினரோ வீட்டுக்கு வந்தாலும் அவர்களைக் கண்டதும் ஸலாம் சொல்வதும் உணவும், தண்ணீரும் வழங்குவதும் அவசியம்.