ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா முகூர்த்தக்கால்
ADDED :10 hours ago
வாடிப்பட்டி: திருவாலவாயநல்லுாரில் சப்பாணி என்ற மந்தை கருப்பண்ண சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். ஆக.2ல் மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 3ல் மந்தை கருப்பண்ண சப்பாணி கோயில், விநாயகர், சுந்தரவள்ளி, காளியம்மன், சோனை சாமி கோயில்களில் பூஜை செய்தல், மதியம் 3:00 மணிக்கு ஹரிஹர புத்திர அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நடக்கிறது. ஆக.4ல் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், கலை நிகழ்ச்சி நடக்கிறது.