உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு ராமேஸ்வரம் கோயில் யானை சிவா உற்சாகம்;

தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு ராமேஸ்வரம் கோயில் யானை சிவா உற்சாகம்;

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புதிய யானை சிவா வெப்ப சலனத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு உற்சாகத்துடன் உள்ளது.


செப்.,25ல் அசாம் தேசிய சரணாலயத்தில் இருந்து சிவா எனும் 5 வயது ஆண் யானையை, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்னை சேவா அறக்கட்டளை வழங்கியது. ராமேஸ்வரம் கோயிலுக்கு யானை சிவா புதியது என்பதால், இதனை பழக்கப்படுத்திட அசாம் சேர்ந்த பைசூல் சலாம், அப்துல் சலாம் இருவரும் பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களுடன் ராமேஸ்வரம் கோயில் பாகன் ராமு இணைந்து பயிற்சி அளிக்கிறார். தற்போது எல்-நினோ வெயில் சுட்டெரிப்பதால் வெப்ப சலனத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரி, கரும்பு, மற்றும் வாழை, தென்னை ஓலைகளை உணவாக உட்கொண்டு உற்சாகத்துடன் கோயில் வடக்கு நந்தவனத்தில் யானை சிவா வலம் வருகிறது. இதனை தினமும் ராமேஸ்வரம் கால்நடை மருத்துவர் கண்காணித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !