ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயில் திருவிழா
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து நடந்தது. பெரிய முத்தாலம்மன் கோயில் இருந்து சாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. நள்ளிரவு 1 மணியளவில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நடந்த கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஊரின் காவல் தெய்வமான சடையாண்டி கோவிலில் திருவிழா முடிந்தவுடன், அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்றிலிருந்து 15 வது நாளில் பெரிய முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும்.