பரமக்குடி துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :1675 days ago
பரமக்குடி: பரமக்குடி சின்ன கடைத்தெருவில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தமிழ் புத்தாண்டு அன்று பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதன்படி பக்தர்கள் பூத்தட்டு களை கோயிலில் சேர்த்தனர். அங்கு மூலவர் துர்க்கை அம்மனுக்கு மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அம்மனை தரிசித்து சென்றனர்.