வருஷாபிஷேக விழா
ADDED :4875 days ago
தூத்துக்குடி: குலசேகரன்பட்டணம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.குலசேகரன்பட்டணம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவில் கணபதிஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மந்திரங்கள் முழங்க கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வெங்கடாசலம், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் புலமுத்து, கல்லூரி முதல்வர் நாகராஜன், தில்லைநாயகம், சுப்பையா, ராஜாபட்டர் உட்பட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.